இந்தியா

அமிர்தசரஸில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

6th Mar 2020 01:55 PM

ADVERTISEMENT

அமிர்தசரஸில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். 

பஞ்சாப் மாநிலம், முலே சக் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றின் மேற்கூரை இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. அப்போது வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலியாகினர். 

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் 4 பேரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமிர்தசரஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT