இந்தியா

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.872 உயர்ந்து புதிய உச்சம் தொட்டது

6th Mar 2020 10:51 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.109 உயர்ந்து புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.4,231க்கு விற்பனையாகிறது.

கரோனோ வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை பிப்ரவரி 18 முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. பிப்ரவரி 25-க்குப் பிறகு, 4 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. அதன்பிறகு, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது. சவரனுக்கு ரூ.872 உயர்ந்து, ரூ.33,848-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.109 உயர்ந்து, ரூ.4,231-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.50.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.50,700 ஆகவும் உள்ளது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,231

1 பவுன் தங்கம் ..................... 33,848

1 கிராம் வெள்ளி .................. 50.70

1 கிலோ வெள்ளி ................. 50,700.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,122

1 பவுன் தங்கம் ..................... 32,976

1 கிராம் வெள்ளி .................. 49.70

1 கிலோ வெள்ளி ................. 49,700

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT