இந்தியா

கர்நாடகத்தில் சாலை விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 12 பேர் பலி

6th Mar 2020 08:57 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீக்கணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 10பேர் காரில் கர்நாடகத்தின் தர்மஸ்தாலா கோயில் சென்றிருந்தனர். சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் அனைவரும் காரில் நள்ளிரவு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தனர். 

அப்போது அவர்கள் வந்த கார் தும்கூர் அருகே குனிகல் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில் 10பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதில் தமிழக பக்தர்களின் காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது. அதில் பெங்களூரை சேர்ந்த 2 பேரும் பலியாகினர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT