இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் 6 மாத பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் கைது

2nd Mar 2020 11:57 AM

ADVERTISEMENT

 

அலிகார்: உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் 6 மாத பெண் குழந்தையை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அலிகார் மாவட்டத்தின் ராம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிங்கி - ராகுல் தம்பதி. இவருக்கும் 6 மாத பெண் குழந்தையும், 3 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருடனான சண்டையில் மகள் சோனியை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

ADVERTISEMENT

புதிய ஆடைகளை வாங்கச் சந்தைக்குச் செல்வது குறித்து பிங்கி சர்மாவுக்கும் அவரது கணவர் ராகுலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இருவரிடைய வாக்குவாதம் முற்றியதில் 6 மாத பெண்குழந்தையைக் கோபத்துடன் தூக்கி வீசியுள்ளார் தாய் பிங்கி.

இதில் பலத்த காயமடைந்த மகள் சோனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து காணவர் ராகுல் அளித்த புகாரின் பேரில் பிங்கி மீது ஐபிசி பிரிவு 302 கொலை வழக்கின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

தனது மகளை வேண்டுமென்றே கொல்லவில்லை என்றும் கணவருடனான வாக்குவாதத்தால் விரக்தியடைந்த நிலையில், தன்னை அறியாமல் இப்படிச் செய்துவிட்டதாகவும், பிங்கி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பூட்டுத் தொழிற்சாலை தொழிலாளியான ராகுலை மணந்துள்ளார் பிங்கி என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT