இந்தியா

ராகவேந்திர சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

2nd Mar 2020 11:59 PM

ADVERTISEMENT

 

திருப்பதி: கா்நாடக மாநிலம், மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது.

கா்நாடக மாநிலம், மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பட்டு வஸ்திரம் சமா்ப்பித்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை ராகவேந்திர சுவாமியின் 425-ஆவது ஜயந்தி உற்சவத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில், ராகவேந்திரருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்பட்டது. இதை தேவஸ்தான அதிகாரிகள் தலையில் சுமந்து சென்று, ராகவேந்திர மடத்தின் மடாதிபதியிடம் அளித்தனா். அதைப் பெற்றுக் கொண்ட மடத்தினா் ராகவேந்திரரின் ஜீவசமாதியில் அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT