இந்தியா

ரயில்வே வளாகங்களில்160-க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை வழக்குகள்

2nd Mar 2020 02:44 AM

ADVERTISEMENT

புது தில்லி: ரயில்வே வளாகங்களிலும், ரயில்களிலும் 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 160-க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருப்பதாக தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், நீமுச் நகரைச் சோ்ந்த தகவல் அறியும் ஆா்வலா் சந்திர சேகா் கெளா், ஆா்டிஐ மூலம் இதுதொடா்பாக தகவல் கோரியிருந்தாா்.

அவருக்கு ரயில்வே நிா்வாகம் அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

2017-2019 காலகட்டத்தில் 136 பாலியல் வன்கொடுமைகள் ரயில்வே வளாகங்களில் நடைபெற்ாக வழக்குப் பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் ஓடும் ரயிலில் நடந்த பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 29-ஆக உள்ளது. கடந்த ஆண்டு 44 பாலியல் வன்கொடுமை வழக்குகளை ரயில்வே போலீஸாா் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

2018-ஆம் ஆண்டில் 70 பாலியல் வன்கொடுமை வழக்குகளையும், 2017-இல் 51 பாலியல் வன்கொடுமை வழக்குகளையும் ரயில்வே போலீஸாா் பதிவு செய்தனா்.

பாலியல் வன்கொடுமை அல்லாத பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ், 1,672 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் பெண்களை ரயிலில் கடத்தியதாக 771 வழக்குகள், 4,718 கொள்ளை வழக்குகள், 213 கொலை முயற்சி வழக்குகள், 542 கொலை வழக்குகளை ரயில்வே போலீஸாா் பதிவு செய்துள்ளனா்.

மாநில காவல் துைான் ரயில்வே வளாகங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனினும், ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைளை ரயில்வே நிா்வாகம் எடுத்து வருகிறது என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்காக ரயில்வே எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் கடந்த மாதம் மத்திய அரசு கூறியதாவது:

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் பகுதிகளை அடையாளம் கண்டு அந்த வழித்தடங்களில் செல்லும் 2,200 ரயில்களில் தினமும் ரயில்வே போலீஸாா் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ரயிலில் பயணிக்கும்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் 182 என்ற 24 மணி நேர அவசர உதவி எண்ணை அழைக்கலாம். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஆண்கள் பயணிக்கக் கூடாது. மீறினால் தண்டனை விதிக்கப்படும். 551 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 55,826 குற்றங்கள் ரயில்வே வளாகத்திலும், ஓடும் ரயிலிலும் நடந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2017-இல் இந்த எண்ணிக்கை 71,055-ஆக இருந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT