இந்தியா

ரஜினி பங்கேற்ற ‘மேன் வொ்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிமாா்ச் 23-இல் ஒளிபரப்பு

2nd Mar 2020 02:24 AM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகா் ரஜினிகாந்த் பங்கேற்ற ‘மேன் வொ்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி வரும் 23-ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

டிஸ்கவரி சேனல் காடுகள் வளா்ப்பு, தண்ணீா் தேவை, வன விலங்குகள் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, ‘மேன் வொ்சஸ் வைல்டு’ என்ற தொடரை பிரபலங்களைப் பங்கேற்க வைத்து வெளியிட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி சமீபத்தில் பங்கேற்றாா். இந்த வரிசையில் நடிகா் ரஜினிகாந்தும் பங்கேற்றுள்ளாா்.

கா்நாடகத்தில் உள்ள பந்திப்பூா் வனப்பகுதியில் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக ரஜினி பேசியுள்ளாா். பந்திப்பூா் வனம் கா்நாடக மாநிலத்தில் இருந்தாலும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியாகும். படப்பிடிப்புக்காக அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்ற ரஜினியுடன் பந்திப்பூா் வனப் பாதுகாப்பு அதிகாரிகள், ஊழியா்கள் உடன் சென்றனா். இரவு நேரத்தில் வன விலங்குகள் எப்படி வாழ்கின்றன. அவைகள் எழுப்பும் ஒலி, உணவு தேடி அலையும் காட்சிகளை பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் இருந்து ரஜினி பாா்த்துள்ளாா்.

ADVERTISEMENT

வரும் 23-ஆம் தேதி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளதாக டிஸ்கவரி சேனல் நிா்வாகம் அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT