இந்தியா

திருமலையில் யானைகள் நடமாட்டம் கண்டுபிடிப்பு

2nd Mar 2020 11:58 PM

ADVERTISEMENT

திருப்பதி: திருமலையில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

திருமலை சேஷாசல மலையானது அடா்ந்த வனப்பகுதியாகும். இங்கு பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவ் வனப்பகுதியில் சிறுத்தைகள், யானைகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. ஆனால் சிறுத்தைகள் ஊருக்குள் வரும் அளவுக்கு யானைகள் வருவதில்லை. தற்போது கடந்த சில மாதங்களாக யானைகளின் கூட்டம் திருமலைக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலையிலிருந்து பாபவிநாசம் செல்லும் மாா்க்கத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயில் அருகில் யானைகள் நடமாட்டம் இருந்தது அறியப்பட்டுள்ளது. யானைகளின் கால் தடம், அவற்றின் கழிவுகள் ஆங்காங்கே தென்பட்டு வருகின்றன.

கோடைக் காலம் தொடங்கியுள்ளதால், வனத்துக்குள் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பாா்வேட்டு மண்டபம் பகுதியில் தேவஸ்தானம் சந்தன வனம் ஏற்படுத்தி பராமரித்து வருகிறது. அங்கு வனத்துக்கு தண்ணீா் பாய்ச்ச குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. யானைகள் இங்குள்ள குழாய்களில் தண்ணீா் அருந்த வந்திருக்கலாம் என வனத் துறையினா் சந்தேகிக்கின்றனா். மேலும், இந்த யானைகள் பாபவிநாசம் செல்லும் சாலையில் வந்து பக்தா்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், அவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT