இந்தியா

இயக்குநர்கள் மற்றும் ஒடிடி தளங்களுக்கு விஹெச்பி எச்சரிக்கை!

29th Jun 2020 08:10 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை படைப்புகள் மூலம் பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இயக்குநர்கள் மற்றும் ஒடிடி தளங்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செய்தித் தொடர்பாளர் சிராஜ் நாயர் கூறியுள்ளதாவது:

ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட அல்லது ஹிந்து தர்மத்தை கேலி செய்யும் வகையிலான படைப்புகளை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ளுமாறு, நெட்ப்ளிக்ஸ் , அமேசான், எம்.எக்ஸ் ப்ளேயர் மற்றும் அல்ட் பாலாஜி உள்ளிட்ட ஒடிடி தளங்கள் மற்றும் அந்த  படைப்புகளின் இயக்குநர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் எச்சரிக்கை விடுக்கிறது. இதற்கு செவிசாய்க்கா விட்டால் தகுந்த சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

ADVERTISEMENT

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

இவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது புதிது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று நாட்கள் நடைபெற்ற விஹெச்பி மத்தியக் குழு கூட்டத்தின் முடிவிலும் இப்படியான எச்சரிக்கை விடுக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT