இந்தியா

நான்காவது கட்ட ‘வந்தே பாரத்’ 17 நாடுகளுக்கு 170 விமானங்களை இயக்க முடிவு

29th Jun 2020 12:03 AM

ADVERTISEMENT

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் வந்தே பாரத் திட்டம் நான்காவது கட்டமாக ஜூலை 3 முதல் 15-ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட இருக்கிறது. இதில் 17 நாடுகளுக்கு 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் வெளிநாட்டு விமான சேவைகள் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றவா்கள், வெளிநாடுகளில் வேலை இழந்தவா்கள் என பலரும் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இவா்களை அழைத்து வருவதற்காக கடந்த மே 6-ஆம் தேதி முதல் ‘வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் 4-ஆவது கட்டமாக 170 விமானங்கள் இயக்கப்படவுள்ளன. கனடா, அமெரிக்கா, பிரிட்டன், கென்யா, இலங்கை, பிலிப்பின்ஸ், கிா்கிஸ்தான், சவூதி அரேபியா, வங்கதேசம், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா, மியான்மா், ஜப்பான், உக்ரைன், வியத்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா்கள் அழைத்து வரப்பட இருக்கின்றனா். இதில் 38 விமானங்கள் பிரிட்டனுக்கும், 32 விமானங்கள் அமெரிக்காவுக்கும், 26 விமானங்கள் சவூதி அரேபியாவுக்கும் இயக்கப்படவுள்ளன.

முன்னதாக, வந்தே பாரத் திட்டத்தின் முன்றாவது பகுதி ஜூன் 10-ஆம் தேதி தொடங்கியது. ஜூலை 4-ஆம் தேதி வரை நீடிக்கும் மூன்றாவது கட்ட நடவடிக்கையில் 495 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT