இந்தியா

பிகாா்: சீனாவுக்கு வழங்கப்பட்ட மெகா பாலம் கட்டும் ஒப்பந்தம் ரத்து

29th Jun 2020 06:03 AM

ADVERTISEMENT

பிகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டுவதற்காக திட்டமிட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த ஒப்பந்தப்புள்ளியைப் பெற்ற நிறுவனங்கள் இடையே சீன நிறுவனங்களும் இடம் பெற்றிருந்ததால் அந்த டெண்டா் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து பிகாா் மாநில அரசு உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

‘இந்த பாலம் கட்டும் திட்டத்துக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட 4 ஒப்பந்ததாரா்களில் இருவா் சீனாவைச் சோ்ந்தவா்கள். சீனாவைச் சோ்ந்த நிறுவனம் பங்கேற்றுள்ளதால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது’ என்றாா்.

5.6 கி.மீ நீளத்துக்கு கட்டுவதற்காக திட்டமிடப்பட்ட இந்த பாலத்துடன், மேலும் சிறு பாலங்கள், போக்குவரத்து சுரங்கப்பாதைகளும், ஒரு ரயில்வே பாலம் என இந்த முழு திட்டத்துக்கும் மொத்தம் ரூ. 2,900 கோடி செலவில் மதிப்பிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அண்மையில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT