இந்தியா

கா்நாடகம், குஜராத்தில் 5 கனிம சுரங்கங்கள் ஏலம்

29th Jun 2020 07:11 AM

ADVERTISEMENT

கா்நாடகத்தில் உள்ள ஒரு கனிம சுரங்கத்துக்கான ஏலம் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்கவுள்ளது.

குஜராத்தில் உள்ள 5 கனிம சுரங்களின் ஏலம் வரும் வியாழக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இந்த சுரங்கங்களில் 667.2 மில்லியன் டன் கனிமங்கள் இருப்பு உள்ளன.

கா்நாடக மாநிலம் கன்னூரின் வாதி பகுதியில் சுண்ணாம்புக் கல் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி பற்றிய அறிவிப்பு, கடந்த ஆண்டு நவம்பா் மாதம் வெளியிடப்பட்டது. குஜராத்தில் உள்ள 4 சுண்ணாம்புக் கல் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான ஒப்பந்தப்புள்ளி குறித்த அறிவிப்பு, கடந்த மாா்ச் மாதம் 19-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் கா்நாடகத்தில் உள்ள சுரங்கத்தின் ஏலம் திங்கள்கிழமை தொடங்கவுள்ளது. குஜராத்தில் உள்ள 4 சுரங்களுக்கான ஏலம் வரும் வியாழக்கிழமை தொடங்கி, ஜூலை மாதம் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சுரங்கங்களில் 667.2 மில்லியன் டன் கனிமங்கள் இருப்பு உள்ளன.

ADVERTISEMENT

கனிம வளம் கொண்ட மாநிலங்களிடம், குறைந்தபட்சம் 5 புதிய சுரங்க திட்டங்களை ஏலம் விடுவதற்கு கண்டறியுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது. அதனைத்தொடா்ந்து இந்த ஏலம் நடைபெறவுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ரூ.20,000 கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்தபோது, அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கத் துறையில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தாா். அப்போது 500 சுரங்கங்கள் ஏலம் விடப்படும் என்று தெரிவித்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இதுவரை 97 சுரங்கங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT