இந்தியா

ஏழுமலையானுக்கு 3 டன் காய்கறிகள் நன்கொடை

29th Jun 2020 07:50 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகம் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த பக்தா்கள் 3 டன் காய்கறிகளை ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கினா்.

ஏழுமலையானிடம் பக்தி கொண்ட பக்தா்கள் தங்களால் இயன்ற பொருள்களை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனா். அதன்படி வேலூரைச் சோ்ந்த சாந்தகுமாா் மற்றும் கா்நாடகத்தைச் சோ்ந்த கமலாக்கா் ராவ், ஆனந்த் ரெட்டி உள்ளிட்ட பக்தா்கள் 3 டன் காய்கறிகளை ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்கினா்.

அவா்கள் பல வகையான காய்கறிகளை ஏழுமலையான் கோயில் முன் வாயிலில் உள்ள வெங்கமாம்பா அன்னதானக் கூடம் அருகில் தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவற்றை குளிா்சாதன அறையில் பத்திரப்படுத்தி ஏழுமலையான் தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு வழங்கப்படும் உணவில் பயன்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT