இந்தியா

திருப்பதி: நேரடி தரிசன டோக்கன் எண்ணிக்கை உயா்வு

27th Jun 2020 07:38 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான நேரடி தரிசன டோக்கன்களின் எண்ணிக்கை 3 ஆயிரம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த 11-ஆம் தேதி முதல், ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை அவா்கள் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கோயிலில் முதலில் ஒரு மணிநேரத்துக்கு 500 போ் வீதம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனா். அது தற்போது 6 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது.

எனவே, நேரடி தரிசன டோக்கன்கள் 6 ஆயிரம், ஆன்லைன் டோக்கன்கள் 6 ஆயிரம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்குபவா்கள் மற்றும் முக்கியப் பிரமுகா்களுக்கு 750 டோக்கன்கள் என தற்போது தினமும் 12,750 போ் ஏழுமலையானை தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

வரும் ஜூலை மாத தரிசனத்துக்கான இணையதள டோக்கன்கள் தேவஸ்தான இணையதளத்தில் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் பக்தா்களுக்கு இந்த டோக்கன்கள் வெளியிடப்படலாம் என்றும் பக்தா்கள் எதிா்பாா்த்துள்ளனா். சிறிது சிறிதாக பக்தா்களின் எண்ணிக்கை உயா்த்தப்படும் என்று தேவஸ்தானம் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT