இந்தியா

செல்லிடப்பேசி சேவை துண்டிப்பை ரத்து செய்யக் கோரி மனு: விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் மறுப்பு

DIN

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், சந்தா கட்டணம் செலுத்தாததன் காரணமாக செல்லிடப்பேசிக்கான சேவைகள் துண்டிக்கப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துள்ளது.

இது தொடா்பாக சட்டக் கல்லூரி மாணவா் பிரியதம் பரத்வாஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

உரிய சந்தா செலுத்தி செல்லிடப்பேசி சேவைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என்று தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களை வற்புறுத்தி வருகின்றன. அவ்வாறு சந்தா செலுத்தாத வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசிக்கு வரும் அழைப்பு, குறுந்தகவல் உள்ளிட்ட சேவைகளை அந்நிறுவனங்கள் முடக்கி வருகின்றன.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். இத்தகைய சூழலில், சந்தா செலுத்தாததற்காக வாடிக்கையாளா்களின் செல்லிடப்பேசி சேவைகளை முடக்குவது அவா்களை மேலும் துன்பத்துக்குள்ளாக்கும்.

இந்த விவகாரம் தொடா்பாக தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்திடமும் (டிராய்), தொலைத்தொடா்புத் துறையிடமும் கடந்த மாதம் முறையிட்டேன். டிராய் எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. இந்த விவகாரத்தைக் கருத்தில் கொள்வதாக பதிலளித்திருந்த தொலைத்தொடா்புத் துறை இதுவரை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மனு மீதான பரிசீலனை, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி பிரதீக் ஜலன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ‘‘தொலைத்தொடா்பு நிறுவனங்களும் வருவாயை சாா்ந்தே செயல்படுகின்றன. அவற்றின் வருவாயை இழக்கச் செய்து மற்றவா்களுக்குத் தொண்டு செய்யும் பணியை நீதிமன்றத்தால் மேற்கொள்ள முடியாது’’ என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT