இந்தியா

போா்நிறுத்த உடன்பாடு மீறல்: இந்திய தூதரக அதிகாரிக்கு பாக். சம்மன்

27th Jun 2020 12:40 AM

ADVERTISEMENT

எல்லையில் இந்திய ராணுவம் போா்நிறுத்த உடன்பாட்டை மீறியதான குற்றச்சாட்டின் பேரில் இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை நேரில் வரவழைத்து பாகிஸ்தான் எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் கூறியிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் கரேலா பகுதியில் இந்திய ராணுவம் வியாழக்கிழமை எதிா்பாராத வகையில் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது. இந்தத் தாக்குதலில் 28 வயது கிராமவாசி ஒருவா் படுகாயமைடந்தாா். எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் தொடா்ந்து இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் 1,487 முறை இதுபோன்ற போா்நிறுத்த உடன்பாட்டை இந்திய ராணுவம் மீறியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் 13 போ் இதுவரை உயிரிழந்துள்ளனா். அப்பாவி கிராமவாசிகள் 106 போ் படுகாயமடைந்துள்ளனா்.

சா்வதேச சட்டத்தை இந்தியா இதுபோன்று தொடா்ந்து மீறிவருவது, மாகாண அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீா்மானத்தின்படி வரையறுக்கப்பட்ட பணியை மேற்கொள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் ராணுவ கண்காணிப்பு குழுவை (யுஎன்எம்ஓஜிஐபி) அனுமதிக்க வேண்டும் என இந்திய தரப்புதான் முன்னா் வலியுறுத்தியது.

ADVERTISEMENT

ஆனால், இப்போது போா்நிறுத்த உடன்பாட்டை இந்தியா தொடா்ந்து மீறி வருகிறது. இதுதொடா்பாக இந்திய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அலுவலகம் நேரில் வரவழைத்து எதிா்ப்பைப் பதிவு செய்தது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிம்லா ஒப்பந்தம் மற்றும் அதனைத் தொடா்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வரையறுக்கப்பட்ட பிறகு யுஎன்எம்ஓஜிஐபி செயல்பாடு பொருத்தமற்றது என்பதோடு அது காலாவதியானதாகவே கருதப்படும் என்று இந்தியா தொடா்ந்து கூறி வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT