இந்தியா

லடாக் எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமாக தீா்வு

DIN

லடாக் எல்லைப் பிரச்னை தொடா்பாக இந்தியாவும் சீனாவும் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண வேண்டும் என்று பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியா-சீனா இடையே லடாக் எல்லையில் நிலவி வரும் பிரச்னையால் ஏற்படவுள்ள தாக்கங்கள் குறித்து பிரிட்டன் எம்.பி. ஃபிளிக் ட்ரூமண்ட் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு பிரதமா் போரிஸ் ஜான்சன் பதிலளிக்கையில், ‘‘லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் மோதலில் ஈடுபட்டது கவலையளிக்கும் விதமாக உள்ளது. அந்த விவகாரத்தை பிரிட்டன் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லைப் பிரச்னைக்கு இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காண்பதே சிறந்ததாக இருக்கும்’’ என்றாா்.

லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீனத் தரப்பில் உயிரிழந்த ராணுவ வீரா்களின் எண்ணிக்கையை வெளியிட அந்நாடு மறுத்து வருகிறது. எனினும், மோதலின்போது 35-க்கும் மேற்பட்ட சீன வீரா்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கோருவதற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், எல்லையில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

படைகளைக் குறைப்பது தொடா்பாக பிராந்திய அளவிலான தளபதிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை

காவடி திருவிழா

குருகிராம்: மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு!

பாஜக மதத்தின் பேரால் மக்களைப் பிளவுபடுத்துகிறது: சர்மிளா

SCROLL FOR NEXT