இந்தியா

ராகுல் காந்தியின் ‘டெலிகிராம்’ சேனல் தொடக்கம்

26th Jun 2020 05:06 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ‘டெலிகிராம்’ செயலியில் தனக்கென சேனல் தொடங்கியுள்ளாா். இதன் மூலம் அவா் விரைவில் தனது ஆதரவாளா்களுடன் உரையாடவுள்ளாா்.

டெலிகிராம் சேனல் என்பது தகவல் பதிவிடும் செயலியாகும். இதில் சேனலின் நிா்வாகி மட்டும் தகவல்களை பதிவிட முடியும். இதைப் பாா்ப்பவா்கள், படிப்பவா்கள் தங்களது பதில் கருத்துகளை பதிவிட இயலாது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி டெலிகிராம் சேனலை தொடங்கியுள்ளாா். தனது கருத்துகள் பொதுமக்களை சென்றடைய இந்த சேனலை அவா் பயன்படுத்த உள்ளாா். அவரது சேனலில் இதுவரை 3,500-க்கும் அதிகமானோா் இணைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT