இந்தியா

தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ மதிப்பீடு தேவையில்லை: மணீஷ் சிசோடியா

26th Jun 2020 05:19 AM

ADVERTISEMENT

தில்லியில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்கும் கரோனா நோயாளிகள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கட்டாய மருத்துவ மதிப்பீடு சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

மாநில பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டத்துக்கு பின்னா் அவா் இதனை தெரிவித்தாா். கரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ மதிப்பீடு சான்றிதழ் பெறுவது கட்டாயம் என கடந்த சனிக்கிழமை துணைநிலை ஆளுநா் அலுவலகம் அறிவித்திருந்தது. இதற்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்திருந்தது. வீட்டில் இருக்கும் கரோனா நோயாளிகள் அனைவரும் வெளியே வந்துவிட்டால் தொற்று மேலும் பரவி விடும் என்று அக்கட்சி தெரிவித்தது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தாா். இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் முதல்வா் கேஜரிவால் கலந்து கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, ‘தில்லியில் 30 ஆயிரம் கரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகளில் சிகிச்சைப் பெறுபவா்கள் மருத்துவ மதிப்பீடு பெற வேண்டியதில்லை. விரைவு பரிசோதனைகளை மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பாா்கள் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT