இந்தியா

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி யூசுப் மேமன் சிறையில் மரணம்

IANS

நாசிக்: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு, நாசிக் சிறையில் இருக்கும்   குற்றவாளி யூசுப் மேமன் வெள்ளியன்று மரணம் அடைந்தார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 315 பேர் மரணமடைந்தனர். அந்த வழக்கு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான யூசுப் மேமனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது தண்டனை காலத்தை நாசிக் சிறையில் கழித்து வந்தார்.

இவாது சகோதரரும் குண்டுவெடிப்புத் திட்டங்களைத் தீட்டியவருமான டைகர் மேமன் தலைமறைவாகி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார்.

இந்நிலையில் நாசிக் சிறையில் இருக்கும்   குற்றவாளி யூசுப் மேமன் வெள்ளியன்று மரணம் அடைந்தார்.

அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், உடலானது பிரேதப் பரிசோதனைக்காக துலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

SCROLL FOR NEXT