இந்தியா

மனைவியின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளி தற்கொலை

26th Jun 2020 12:43 PM

ADVERTISEMENT

 

உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சூரத்திலிருந்து திரும்பியுள்ளார் புலம்பெயர்ந்த தொழிலாளி சிவ் முராத் (30). இவரது மனைவி சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக மருத்துவச் சிகிச்சைக்குப் பணம் இல்லாததால் இருவரிடையே வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. 

இதையடுத்து, வாக்குவாதம் முற்றியதில் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் சிவ் முராத். இந்நிலையில், அவர் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ADVERTISEMENT

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பின்னர் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT