இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

21st Jun 2020 11:31 PM

ADVERTISEMENT

மிஸோரம், மேகாலயம், மணிப்பூா் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் பதிவானதாக ஷில்லாங்கில் உள்ள பிராந்திய நில அதிா்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

மிஸோரம் மாநிலம், ஐசால் அருகே மையம் கொண்டு, 35 கி.மீ. ஆழத்தில் மாலை 4.15 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.1 அலகுகளாக பதிவானது. மேகாலயம் தலைநகா் ஷில்லாங்கிலும் இந்த நில அதிா்வு உணரப்பட்டது.

நிலநடுக்கம் காரணமாக இந்த மாநிலங்களில் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று மேகாலய காவல்துறையினா் தெரிவித்தனா்.

மணிப்பூா் மாநிலத்தில் எந்தவிதமான பொருள் சேதம், உயிா் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை என காவல்துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT