இந்தியா

மருத்துவ பணியாளா்கள் விடுமுறை ரத்து: தில்லி அரசு

21st Jun 2020 12:16 AM

ADVERTISEMENT

தில்லி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி அரசு வெளியிட்ட உத்தரவில், ‘மேற்கண்ட மருத்துவமனைகளின் முதுநிலை மருத்துவா்கள், மருத்துவ இயக்குநா்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஊழியா்கள் அனைவரும் பணிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். தவிா்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே ஊழியா்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பணியாளா்களின் விடுமுறையை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT