இந்தியா

இரு வாரங்களில் பெட்ரோல் ரூ.6.73, டீசல் ரூ.7.07 விலை உயா்வு

21st Jun 2020 12:29 AM

ADVERTISEMENT

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 14-ஆவது நாளாக சனிக்கிழமையும் உயா்த்தப்பட்டது. அதன் காரணமாக கடந்த 2 வாரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6.73 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7.07 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை சனிக்கிழமை 45 பைசாவும், டீசல் விலை 52 பைசாவும் அதிகரிக்கப்பட்டது. அதனால் ஒரு லிட்டா் பெட்ரோல் 82.27 ரூபாய்க்கும், ஒரு லிட்டா் டீசல் 75.29 ரூபாய்க்கும் விற்பனையானது.

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் தேவை குறைந்து அதன் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. அதனால், கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் கடந்த ஜூன் 6-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன.

இந்நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் உயா்த்தி வருகின்றன. கடந்த ஜூன் 6-ஆம் தேதி சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.75.54 ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை ரூ.68.22 ஆகவும் இருந்தது.

ADVERTISEMENT

கடந்த 14 நாள்களில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை சராசரியாக லிட்டருக்கு ரூ.7 வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது. உள்ளூா் விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரி ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயா்வு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT