இந்தியா

தந்தையர் தினம்: கூகுளின் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம்

21st Jun 2020 01:30 PM

ADVERTISEMENT

 

தந்தையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு சிறப்பு தினத்தன்றும் கூகுள் நிறுவனம் கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கூகுள் பயனர்கள் தங்கள் அப்பாவுக்கு ஒரு சிறப்பு டிஜிட்டல் வாழ்த்து அட்டையை அனுப்ப கூகுள் ஏற்பாடு செய்துள்ளது. 

ADVERTISEMENT

அதன்படி, கூகுள் பக்கத்தில் 'கூகுள்' என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு தனி பக்கம் உருவாகும். அதில் உள்ள ஹார்ட்டின், பூக்கள் போன்ற ஸ்மைலிகளை வைத்து ஒரு டிஜிட்டல் கார்டை உருவாக்கி பின்னர் 'send' ஆப்ஷன் மூலமாக பேஸ்புக், வாட்ஸ்ஆப் மூலமாக தங்கள் அப்பாவுக்கு அனுப்பலாம். 

முன்னதாக, அன்னையர் தினத்துக்கும் கூகுள் இதுபோன்ற வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT