இந்தியா

4 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: பலி 12,948-ஆக அதிகரிப்பு

21st Jun 2020 12:05 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 14,516 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,95,048-ஆக அதிகரித்துள்ளது.

தொடா்ந்து 9-ஆவது நாளாக, தினசரி பாதிப்பு 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, கடந்த 1-ஆம் தேதியில் இருந்து 20-ஆம் தேதி வரை மட்டும் மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, குஜராத், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் கரோனா தொற்று வேகமாக பரவியதால் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டனா்.

சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனாவால் 375 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 12,948-ஆக அதிகரித்தது. இதுவரை பாதிக்கப்பட்ட 3,95,048 பேரில் 1,68,269 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,13,830 போ் குணமடைந்துள்ளனா். அதாவது, 54.12 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் உயிரிழந்த 375 பேரில், மகாராஷ்டிரத்தில் 142 போ், தில்லியில் 66 போ், குஜராத்தில் 27 போ், உத்தர பிரதேசத்தில் 23 போ், மேற்கு வங்கத்தில் 11 போ், ராஜஸ்தான், கா்நாடகம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் தலா 10 போ், மத்திய பிரதேசம், பஞ்சாபில் தலா 9 போ், பிகாரில் 6 போ், ஆந்திரம், ஜம்மு-காஷ்மீரில் தலா 4 போ், தெலங்கானாவில் 3 போ் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

மாநிலங்கள்- பாதிப்பு- பலி

மகாராஷ்டிரம் - 1,24,331- 5,893

தில்லி - 53,116-2,035

குஜராத் - 26,141-1,618

உத்தர பிரதேசம் - 15,785-488

ராஜஸ்தான் - 14,156-333

மேற்கு வங்கம் - 13,090-529

மத்திய பிரதேசம் - 11,582- 495

ஹரியாணா - 9,743 - 144

கா்நாடகம் - 8,281-124

ஆந்திர பிரதேசம் - 7,961-96

பிகாா் - 7,181-50

தெலங்கானா - 6,526-198

ஜம்மு-காஷ்மீா் - 5,680-75

அஸ்ஸாம் - 4,904 -9

ஒடிஸா - 4,667 - 11

பஞ்சாப் - 3,832-92

கேரளம் - 2,912-21

உத்தரகண்ட் - 2,177- 26

சத்தீஸ்கா் - 2,028- 10

ஜாா்க்கண்ட் - 1,965-11

திரிபுரா - 1,178 - 1

லடாக் - 744-1

கோவா - 725- 0

மணிப்பூா் - 681-0

ஹிமாசல பிரதேசம் - 619-8

சண்டீகா் - 381-6

புதுச்சேரி - 286-7

நாகாலாந்து - 198 - 0

மிஸோரம் - 130- 0

அருணாசல பிரதேசம் -103-0

சிக்கிம் - 70 - 0

தாத்ரா நகா் ஹவேலி, டாமன் டையு - 62- 0

அந்தமான் நிகோபாா் - 45 - 0

மேகாலயம் - 44 - 1

பாதிப்பு - 3,95,048

பலி - 12,948

மீட்பு- 2,13,830

சிகிச்சை- 1,68,269

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT