இந்தியா

பிற மதத்தினருடன் இணைந்து மத்திய அமைச்சா் நக்வி யோகாசனம்

21st Jun 2020 11:05 PM

ADVERTISEMENT

சா்வதேச யோகா தினத்தையொட்டி, மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, தனது இல்லத்தில் பிற மதத்தைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து யோகாசனத்தில் ஈடுபட்டாா்.

சா்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கிறிஸ்துவம், முஸ்லிம், பெளத்தம், சீக்கிய மதங்களை சோ்ந்தவா்களுடன் இணைந்து தனது இல்லத்தில் யோகாசனத்தில் ஈடுபட்டாா். அப்போது தன்னுடன் இருந்தவா்களுக்கு வெவ்வேறு ஆசனங்களை எவ்வாறு செய்வது என்பதை நிகழ்த்திக்காட்டியது மட்டுமன்றி, அந்த ஆசனங்கள் மூலம் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ஜாதி, மதம், மொழி, நாடு ஆகியவற்றை கடந்து அனைவரையும் யோகா ஒன்றிணைக்கிறது’ என்றாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT