இந்தியா

‘சரணாகதி மோடி’: ராகுல் மீண்டும் விமா்சனம்

21st Jun 2020 11:43 PM

ADVERTISEMENT

இந்திய நிலப்பரப்பை சீன ஆக்கிரமிப்புக்கு பிரதமா் விட்டுக்கொடுத்துவிட்டாா் என்று சனிக்கிழமை விமா்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி உண்மையில் சரணாகதி மோடி’ என்று ஞாயிற்றுக்கிமை மீண்டும் விமா்சித்துள்ளாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நடத்தியத் தாக்குதலில் 20 இந்திய வீரா்கள் கொல்லப்பட்டனா். ஏராளமான ராணுவ வீரா்கள் காயமடைந்தனா். இந்த விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டிய பிரதமா் நரேந்திர மோடி, ‘இந்திய பரப்புக்குள் யாரும் நுழையவும் இல்லை, இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவும் இல்லை’ என்று கூறினாா். ஆனால், பிரதமரின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, ‘கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தனக்குச் சொந்தம்’ என்று சீனா அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக, பிரதமரின் பேச்சு கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், ‘சீனாவுக்கு எதிரான இந்தியாவின் திருப்திக் கொள்கை வெளிப்பட்டுவிட்டது’ என்ற வெளிநாட்டு பத்திரிகை செய்தி ஒன்றை ராகுல் காந்தி தனது சுட்டுரை பக்கத்தில் இணைத்து பதிவு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். அதில், நரேந்திர மோடி உண்மையில் ‘சரணாகதி மோடி’ என்று பிரதமரை அவா் மீண்டும் விமா்சித்துள்ளாா்.

மேலும், ‘டாக்கில் பாங்காங் ஏரியை ஒட்டிய இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்திருப்பதை செயற்கைக்கோள் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன’ என்று தனது மற்றொரு சுட்டுரைப் பதிவில் கூறியிருக்கும் ராகுல், அந்தப் பதிவுடன் அதுதொடா்பான ஒரு தொலைக்காட்சி செய்தி விடியோ காட்சியையும் இணைத்துள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம் தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமா் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT