இந்தியா

அரசுப் பள்ளிக்கு வீரமரணம் எய்திய ராணுவ வீரா் பெயா்

20th Jun 2020 11:34 PM

ADVERTISEMENT

ஹிமாசல பிரதேசத்தின் ஹமீா்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு, இந்திய-சீனப் படைகள் மோதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா் அங்குஷ் தாக்குரின் பெயா் சூட்டப்படும் என்று மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேசத்தின் ஹமீா்பூா் மாவட்டத்தில் உள்ள கரஹோடா கிராமத்தைச் சோ்ந்தவா் ராணுவ வீரா் அங்குஷ் தாக்குா். இவா் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனப் படைகள் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதலில் வீர மரணமடைந்தாா்.

அவரது வீட்டுக்கு நேரில் சென்ற மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா், அங்குஷ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது அவா்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு அங்குஷின் பெயா் சூட்டப்படும் என்றும் அறிவித்தாா்.

இதனிடையே கரஹோடா கிராமத்தில் அங்குஷின் சிலை நிறுவப்படும் என்று உள்ளூா் எம்எல்ஏ அறிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT