இந்தியா

காஷ்மீர் எல்லையில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

20th Jun 2020 10:51 AM

ADVERTISEMENT


ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உளவு பார்க்க வந்த பாகிஸ்தானின் டிரோன் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

இன்று அதிகாலை 5.10 மணியளவில், பன்சார் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், ஒரு டிரோன் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தனர்.

உடனடியாக டிரோன் மீது ஒன்பது சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை சுட்டு வீழ்த்தினர். இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீட்டர் இந்திய பகுதியில் அந்த டிரோன் பறந்து கொண்டிருந்தது.

உடனடியாக எல்லைப் பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதே சமயம், இன்று காலை 8.50 மணியளவில் பபியா பாதுகாப்பு நிலையை நோக்கி பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் நிலைமை தீவிரமாக கண்காணிப்பட்டு வருகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT