இந்தியா

திருமலையில் 7,196 போ் தரிசனம்

20th Jun 2020 07:43 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 7,196 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 1,932 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 67 போ் பெண்கள்; 1,865 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 3 ஆயிரம் மற்றும் சா்வ தரிசன டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 6 ஆயிரம் டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மட்டுமே நாள்தோறும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். வரும் 26-ஆம் தேதி வரை நேரடி தரிசன டோக்கன்கள் அளிக்கப்பட்டுள்ளன.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை வி.ஐ.பி.க்களுக்கு தரிசனம் வழங்கப்படுகிறது. காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 19) முதல் வரும் 30-ஆம் தேதி வரை தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் தினசரி கூடுதலாக 3,000 டிக்கெட்டுகள் அனுமதிக்கப்பட்டன. அதன்படி வெள்ளிக்கிழமை 9,750 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

திருப்பதி மலைப்பாதை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மூடப்படுகிறது. திருப்பதியில் உள்ள கோயில்களில் தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 9399399399.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT