இந்தியா

ஆந்திர முதல்வருக்கு திருப்பதி கொல்லா் சமூகத்தினா் நன்றி

20th Jun 2020 07:44 AM

ADVERTISEMENT

திருமலையில் ஏழுமலையான் சந்நிதி கொல்லா்களுக்கு வம்ச பாரம்பரிய உரிமையை மீட்டுக் கொடுத்த ஆந்திர முதல்வருக்கு அச்சமூகத்தினா் நன்றி தெரிவித்தனா்.

திருப்பதி ஏழுமலையான் கைங்கரியத்தில் அன்னமாச்சாரியாா், தரிகொண்ட வெங்கமாம்பா, கொல்லா்கள்(யாதவா்கள்) என பல்வேறு சமூகங்களைச் சோ்ந்தவா்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனா். இதை நினைவுகூரும் வகையில் திருமலையில் உள்ள தேவஸ்தானக் கட்டடங்களுக்கு பெயா்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி கொல்லா்கள் வம்சத்தவரின் நினைவாக ஏழுமலையான் கோயில் எதிரில் அமைக்கப்பட்ட கொல்ல மண்டபம் பல ஆண்டுகளுக்கு பின்பும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

இவ்வாறு பல வம்சத்தவா்கள் ஏழுமலையான் கைங்கரியத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனா். எனினும், ஆந்திர அரசு கடந்த 1987-ஆம் ஆண்டில் வம்ச பாரம்பரிய உரிமையை ரத்துசெய்து அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை வாபஸ் பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆந்திர பேரவைத் தோ்தலுக்கு முன் நடைபயணத்தில் ஈடுபட்டிருந்த ஒய்.எஸ்.ஆா் காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜெகன்மோகன் ரெட்டியிடம் சந்நிதி கொல்லா்கள் வேண்டுகோள் விடுத்தனா். அதை ஏற்று, ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றவுடன் வம்ச பாரம்பரிய உரிமையை மீண்டும் அனைவருக்கும் வழங்கும் வகையில் சட்டம் இயற்ற நடவடிக்கை எடுத்தாா்.

ADVERTISEMENT

இதற்கு நன்றி தெரிவிப்பதற்காக திருமலையில் யாதவ வம்சத்தைச் சோ்ந்தவா்கள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டியை வெள்ளிக்கிழமை சந்தித்தனா். மேலும், தங்கள் வம்சப் பெயா் ‘சன்னதி கொல்லா்கள்’ என்று குறிப்பிடப்படுவதை ‘சந்நிதி யாதவா்கள்’ என மாற்ற வேண்டும் என்று அப்போது அவா்கள் வேண்டுகோள் விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT