இந்தியா

முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு

17th Jun 2020 01:33 PM

ADVERTISEMENT

 

லடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

லடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

இதன்பின்னர், லடாக் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படியும்,   முப்படைகளும் தயார் நிலையில் இருக்கும்படியும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT

முன்னதாக, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். இந்த மோதலில் சீனத் தரப்பில் 35 பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT