இந்திய- சீன எல்லைப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜூன் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, லடாக் எல்லையில் சீனத் தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.