இந்தியா

ஜூன் 21ல் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

17th Jun 2020 02:13 PM

ADVERTISEMENT

 

வருகிற ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். 

சா்வதேச யோகா தினம் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பரிந்துரையை ஏற்று, ஐ.நா. இதனை அறிவித்தது.

அப்போது முதல் ஒவ்வோா் ஆண்டும் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்று வருகிறாா். தான் யோகாசனங்கள் செய்வது போன்ற விடியோவையும் அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 

ADVERTISEMENT

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யோகா, வாழ்வின் ஓர் அங்கமாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி மக்களிடையே தொடர்ந்து வலியறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT