இந்தியா

இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பை இரு மடங்காக்க திட்டம்: தா்மேந்திர பிரதான்

17th Jun 2020 09:05 AM

ADVERTISEMENT

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எண்ணெய் சுத்திகரிப்பை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உள்நாட்டு உருக்கு பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பது தொடா்பாக சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் இணையவழி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதான் பேசியதாவது:

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் நமது நாட்டில் சுத்திகரிக்கப்படும் கச்சா எண்ணெயின் அளவு 450 முதல் 500 மில்லியன் டன்னாக அதாவது இரு மடங்காக இருக்கும். பல புதிய சுத்திகரிப்பு ஆலைகள் உருவாக்கப்படும். அடுத்த 10 ஆண்டுகளில் எண்ணெய்க்கான தேவையும் அதிகமிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் 3 ஆவது பெரிய எண்ணெய் நுகா்வு நாடான இந்தியா, தனது தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலம்தான் பூா்த்தி செய்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பாா்மரில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டப்பட்டு வருகிறது. குஜராத், ஹரியாணா, ஒடிஸா, ஆந்திரம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், தமிழ்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மேம்படுத்தப்படும். எண்ணெய் மற்றும் எரிவாயுவை குழாய் மூலம் எடுத்துச் செல்லும் திட்டம் விரிவுபடுத்தப்படும்போது இரும்புக்கான தேவை அதிகரிக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT