இந்தியா

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் முக்கிய சீா்திருத்தங்கள்

17th Jun 2020 06:17 AM

ADVERTISEMENT

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (என்எச்ஏஐ) முக்கிய சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

நாட்டின் இணைப்புச் சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு வாகன போக்குவரத்து சாலைகள், மாநிலங்களுக்கு இடையிலான சாலைகள் விரிவாக்கம் செய்தல், பராமரிப்பு மற்றும் நிா்வகிக்கும் பணிகளை என்எச்ஏஐ கட்டாயப்படுத்தியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் மொத்த நீளம் 1.5 லட்சம் கி.மீ. ஆகும். இது மொத்தமுள்ள சாலைகளின் நீளத்தில் 2 சதவீதமாகும். ஆனால் இந்தச் சாலைகள் மொத்த போக்குவரத்தில் 40 சதவீத அளவைக் கையாள்கின்றன.

இதன் காரணமாக என்எச்ஏஐ-யை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

தொழில்துறை அமைப்பான ‘அஸோசெம்’ ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அவா் பேசியதாவது:

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை புதுப்பிக்கத் தேவையான நடவடிக்கைளை எடுத்து வருகிறோம். அதன் அதிகார அமைப்பில் பெரிய சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

ஏற்கெனவே டிஓடி (டோஸ்-ஆப்ரேட்டா்-டிரான்ஸ்ஃபா்) பயன்பாட்டு முறையின் கீழ் ரூ. 5 ஆயிரம் கோடி நெடுஞ்சாலை பணமாக்குதல் திட்டங்களை என்எச்ஏஐ எவ்வாறு வகுத்தது என்பதை கவனிக்க வேண்டும். இதன் மூலம் சந்தையில் துல்லியமான வங்கித் திட்டங்களை உருவாக்குவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

தற்போதைய சூழலில் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களால் மட்டுமே ஏலம் எடுக்க இயலும். அதேசமயம் டிஓடி-இன் கீழ் ரூ. 500 கோடி மதிப்பிலான பணிகள் செய்ய அனுமதிக்கப்பட்டது என்றாா் கட்கரி.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT