இந்தியா

லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டுத் தாக்குதல்: அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

17th Jun 2020 05:33 PM

ADVERTISEMENT

 

 

லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய- சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார். 

இதில், லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட கூறியுள்ளார். 

மேலும், இந்த தாக்குதல் இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீனா,  தங்கள் தரப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து நிலைமையை சீராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT