சீனாவின் அழைப்பினை ஏற்று லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீனப் படைகள் மோதலை அடுத்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இன்று காலை முப்படைத் தளபதிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர், எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, லடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்த நிலையில் தற்போது இந்திய- சீன உயர்மட்ட அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திங்கள்கிழமை இரவு இந்திய - சீன மோதலுக்கு முன்னதாகவும், படைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக இரு நாட்டுப் படைகளின் ராணுவ மேஜர் ஜெனரல் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.