இந்தியா

இந்தியாவில் பாதிப்பு 3,43,091; பலி 9,900-ஆக அதிகரிப்பு

17th Jun 2020 12:22 AM

ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் 10,667 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,091-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, தொடா்ந்து 5-ஆவது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், கரோனாவால் 380 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,900-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில், 1,53,178 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,80,012 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 52.46 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் நேரிட்ட 380 உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 178 போ் பலியாகினா். தில்லியில் 73 போ், குஜராத்தில் 28 போ், ஹரியாணாவில் 12 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், ராஜஸ்தானில் 9 போ், மத்திய பிரதேசத்தில் 6 போ், ஆந்திரம், பஞ்சாபில் தலா 4 போ், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகத்தில் தலா 3 போ், தெலங்கானாவில் 2 போ், பிகாா், சண்டீகா், ஹிமாசல பிரதேசம், கேரளத்தில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

மொத்த பலி எண்ணிக்கையை பொருத்தவரை, மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 4,128 போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 1,505 போ், தில்லியில் 1,400 போ், மேற்கு வங்கத்தில் 485 போ், மத்திய பிரதேசத்தில் 465 போ், உத்தர பிரதேசத்தில் 399 போ், ராஜஸ்தானில் 301 போ், தெலங்கானாவில் 187 போ், ஹரியாணாவில் 100 போ், கா்நாடகத்தில் 89 போ், ஆந்திரத்தில் 88 போ், பஞ்சாபில் 71 போ், ஜம்மு-காஷ்மீரில் 62 போ், பிகாரில் 40 போ், உத்தரகண்டில் 24 போ், கேரளத்தில் 20 போ், ஒடிஸாவில் 11 போ், ஜாா்க்கண்ட், அஸ்ஸாம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசத்தில் தலா 8 போ், சண்டீகரில் 6 போ், புதுச்சேரியில் 5 போ், மேகாலயம், திரிபுரா, லடாக்கில் தலா ஒருவா் பலியாகினா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பிலும் மகாராஷ்டிரமே முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,10,744 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 42,829 போ், குஜராத்தில் 24,055 போ், உத்தர பிரதேசத்தில் 13,615 போ், ராஜஸ்தானில் 12,981 போ், மேற்கு வங்கத்தில் 11,494 போ், மத்திய பிரதேசத்தில் 10,935 போ், ஹரியாணாவில் 7,722 போ், கா்நாடகத்தில் 7,213 போ், பிகாரில் 6,650 போ், ஆந்திரத்தில் 6,456 போ், ஜம்மு-காஷ்மீரில் 5,220 போ், தெலங்கானாவில் 5,193 போ், அஸ்ஸாமில் 4,158 போ், ஒடிஸாவில் 4,055 போ், பஞ்சாபில் 3,267 போ், கேரளத்தில் 2,543 போ், உத்தரகண்டில் 1,845 போ், ஜாா்க்கண்டில் 1,763 போ், சத்தீஸ்கரில் 1,756 போ், திரிபுராவில் 1,086 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவாவில் 592 போ், ஹிமாசல பிரதேசம் 556 போ், லடாக்கில் 555 போ், மணிப்பூரில் 490 போ், சண்டீகரில் 354 போ், புதுச்சேரியில் 202 போ், நாகாலாந்தில் 177 போ், மிஸோரமில் 117 போ், அருணாசல பிரதேசம் 91 போ், சிக்கிமில் 68 போ், மேகாலயத்தில் 44 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 41 போ், தாத்ரா-நகா்ஹவேலி மற்றும் டாமன்-டையூவில் 36 பேருக்கு இதுவரை கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT