இந்தியா

பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 1,50,000-ஐ எட்டியது: பலி 2,975 ஆக உயர்வு

17th Jun 2020 11:48 AM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் 136 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 2,975 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 28,117 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை அந்த மாநிலத்தில் 9,50,782 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் ஒரே நாளில் 5,839 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,54,760 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பஞ்சாபில் அதிகபட்சமாக 58,239 பேருக்கும், சிந்துவில் 57,868, கைபர்-பக்துன்க்வாவில் 19,107, இஸ்லாமாபாத்தில் 9,242, பலூசிஸ்தானில் 8,437, கில்கிட்-பால்டிஸ்தானில் 1,164 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 703 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது. இதுவரை இந்த நோயால் பாதிக்கப்பட்ட 58,437 பேர் குணமடைந்துள்ளனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT