இந்தியா

புதிதாக திருமணமான நபருக்கு கரோனா

15th Jun 2020 04:54 PM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் புதிதாக திருமணமான நபருக்கு இன்று (திங்கள்கிழமை) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனைவி உள்பட 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு முன் 22 வயது மிக்க நபருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தபோதிலும், திருமணமாகி மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அவரது மனைவி உள்பட திருமணத்தில் பங்கேற்ற 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர், ஆய்வகத்தில் உதவியாளராகப் பணிபுரிபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT