இந்தியா

அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி ட்வீட்

15th Jun 2020 03:13 PM

ADVERTISEMENT

 

அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்திருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ஒப்பீட்டு வரைபடத்தை பதிவிட்டுள்ளார். அது, நாட்டில் கரோனா உயிரிழப்புக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இடையேயான வரைபடம். அதாவது, பொதுமுடக்க காலத்தில் கரோனா உயிரிழப்பு அதிகரிக்க, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. 

இந்த வரைபடத்துடன்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளார். அறியாமையை விட ஆணவம் மிகவும் ஆபத்தானது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை இந்த பொதுமுடக்கம் நிரூபித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT