இந்தியா

கேரளத்தில் புதிதாக 82 பேருக்கும், கர்நாடகத்தில் புதிதாக 213 பேருக்கும் கரோனா தொற்று

15th Jun 2020 06:59 PM

ADVERTISEMENT


கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளம்:

கேரளத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 82 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 49 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 23 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,348 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,174 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகம்:

ADVERTISEMENT

கர்நாடகத்தில் புதிதாக 213 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,213 ஆகவும், பலி எண்ணிக்கை 88 ஆகவும் உயர்ந்துள்ளன. இதுவரை மொத்தம் 4,135 பேர் குணமடைந்துள்ளனர். 2,987 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT