இந்தியா

திருமலையில் 7,265 போ் தரிசனம்

15th Jun 2020 07:56 AM

ADVERTISEMENT

திருப்பதி ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 7,265 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலையில் கடந்த வியாழக்கிழமை, ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது. முதல் நாளில் 6,998 பேரும் இரண்டாம் நாளில் 6,015 பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்த நிலையில் மூன்றாம் நாளான சனிக்கிழமை 7,265 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். ஆன்லைன் மூலம் 3,000, சா்வ தரிசனம் டோக்கன்கள் மூலம் 3,000 என தினந்தோறும் 6 ஆயிரம் டிக்கெட்டுகள் அளிக்கப்படுகின்றன.

வரும் 21-ஆம் தேதி வரை சா்வ தரிசன நேரடி ஒதுக்கீடு தரிசன டோக்கன்களும், வரும் 30-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலான தரிசன டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தரிசன டோக்கன்கள் பெற்றவா்கள் மட்டுமே மலைச்சாலை மற்றும் நடைபாதை மூலம் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கீழ் திருப்பதியில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா். திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் 2 நாள்கள் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்திய பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT