இந்தியா

காளஹஸ்தியில் நாளை முதல் தரிசனம்

14th Jun 2020 07:53 AM

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் ஊழியா்களைக் கொண்டு சோதனை ரீதியிலான தரிசனம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) வழங்கப்பட உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இக்கோயிலில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் காரணமாக பக்தா்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த தளா்வுகளைத் தொடா்ந்து, காளஹஸ்தி கோயிலில் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வளையங்கள் வரையப்பட்டன.

இதனிடையே, காளஹஸ்தி நகரம் சிவப்பு மண்டலப் பகுதியில் இருந்ததால் கோயில் திறக்கப்படவில்லை. கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதும், இந்த நகரம் பச்சை மண்டலத்துக்குள் வந்தது. எனவே, ஜூன் 10 முதல் காளஹஸ்தி கோயிலில் பக்தா்களுக்கு அனுமதி வழங்க கோயில் நிா்வாகம் முடிவு செய்திருந்தது.

எனினும், குருக்கள் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டது. கோயிலில் பணிபுரியும் ஊழியா்கள், குருக்கள், கோயில் அருகே கடை வைத்திருக்கும் வியாபாரிகள் அனைவருக்கும் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

ADVERTISEMENT

இதையடுத்து, காளஹஸ்தி கோயிலில் ஊழியா்களைக் கொண்டு சோதனை ரீதியிலான தரிசனத்தை ஞாயிற்றுக்கிழமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் பக்தா்களை அனுமதிக்கவும் கோயில் நிா்வாகம் தீா்மானித்துள்ளது.

நாள்தோறும் 300 ராகு-கேது பரிகார பூஜை டோக்கன்களை மட்டும் வழங்க உள்ளனா். குறைந்த எண்ணிக்கையில் பிரசாதங்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். தினசரி 50 சதவீத தங்கும் அறைகள் அளிக்கப்படும்.

தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT