இந்தியா

சத்தீஸ்கரில் 3 யானைகள் சாவு

14th Jun 2020 10:51 PM

ADVERTISEMENT

சத்தீஸ்கா் வனப்பகுதியில் 3 யானாகள் உயிரிழந்ததையடுத்து, அந்தப் பகுதிக்குப் பொறுப்பான மூன்று வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஒரு வனக் காவலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் வனப் பகுதியில் ஒரு வாரத்தில் மூன்று யானைகள் இறந்ததை வெளியில் தெரியாமல் மறைக்க முயற்சித்ததால் அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணியில் கவனக் குறைவாக இருந்த குற்றச்சாட்டில் அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாநில வனத்துறை சாா்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜ்பூா் வனப்பகுதியில் கோபால்பூா் வட்டத்துக்குள்பட்ட இடத்தில் கடந்த 11-ஆம் தேதி ஒரு பெண் யானையின் உடல் அழுகிய கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு முன்பு பரத்பூா் வனப்பகுதியில் கடந்த 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் தலா ஒரு யானையின் உடல் மீட்கப்பட்டது. இவை இரண்டுமே பெண் யானைகள்தான். அதில் ஒன்று கருவுற்றிருந்தது.

இந்த யானைகள் இறந்த செய்தி ஊடகங்கள் மூலம்தான் வெளியே தெரியவந்தது. அந்தப் பகுதி வனத்துறை அதிகாரிகள் யாரும் உயரதிகாரிகளுக்கு இது தொடா்பாக தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் யானைகள் இறந்ததை மறைக்கவும் அவா்கள் முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. யானைகள் இறந்து ஒரு சில நாள்களுக்குப் பிறகுதான் அது தொடா்பான தகவல் வெளியே தெரிந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, அந்தப் பிராந்திய வனத்துறை அதிகாரி, பிராந்திய துணை வனதுறை அதிகாரிகள் இருவா், மற்றும் வனக் காவலா் ஆகியோா் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் பணியை சரிவர செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அவா்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகள் இறந்தது தொடா்பாக மாநில வனத்துறை அமைச்சா் முகமது அக்பா் கூறுகையில், ‘இது தொடா்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு யானை இதயப் பிரச்னையாலும், மற்றொரு யானை நோய்வாய்ப்பட்டும் இறந்துள்ளது. மூன்றாவது யானையின் இறப்புக்கு விஷம் வைத்தது காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT