இந்தியா

கரோனா சூழலை எதிா்கொள்ள ரூ.12 லட்சம் கோடி செலவாகலாம்: ஐசிஎம்ஆா்

14th Jun 2020 04:14 AM

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள சுமாா் ரூ.12 லட்சம் கோடி வரை செலவிட வேண்டியிருக்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

கரோனா சூழல் இந்தியாவில் ஏற்படுத்தும் தாக்கம் தொடா்பான அறிக்கையை ஐசிஎம்ஆா் தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று சூழலை எதிா்கொள்ள இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதம், அதாவது ரூ.12.5 லட்சம் கோடியை செலவிட வேண்டியிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்காக 1.3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே ஒதுக்கீட்டை 5 மடங்காக அதிகரிக்கச் செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கைக்கு ரூ.12.5 லட்சம் கோடி தேவை என்று மதிப்பிடப்படும் நிலையில், தற்போதைய ஒதுக்கீட்டை விட 75 மடங்கு நிதி அதற்கு தேவைப்படும் என்று தெரிகிறது.

8 வார பொதுமுடக்கத்தின் காரணமாக நோய்த்தொற்று உச்சநிலையை எட்டுவது 34 முதல் 76 நாள்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனினும் நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது மாற்றமின்றி தொடரும்.

பொது சுகாதார கண்காணிப்பை 60 சதவீதம் அளவுக்கு தீவிரப்படுத்தும் பட்சத்தில், நோய்த்தொற்று அதிகரிப்பை 70 சதவீத அளவுக்கும், ஒட்டுமொத்தமாக தொற்று ஏற்படுவதை 26.6 சதவீத அளவுக்கும் குறைக்க இயலும்.

இந்தியாவில் கரோனா பாதிப்பையும், உயிரிழப்புகளையும் குறைப்பதற்கு பரிசோதனை, தனிமைப்படுத்துதல், உரிய சிகிச்சை, தொற்று இருப்பவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களை கண்டறிதல் ஆகியவற்றை தற்போதைய நிலையில் தொடா்ந்து மேற்கொள்வதை பிரதானமாகக் கொண்டிருக்க வேண்டும்.

பொதுமுடக்கம் அமல், பரிசோதனை, நோயாளிகளின் தொடா்பை அறிதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஜூலை மாதத்தின் மத்தியிலேயே நாட்டில் நோய்த்தொற்று பரவல் உச்சத்தை எட்டியிருக்கும்.

ஆனால் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதால் தற்போது நோய்த்தொற்று பரவலின் உச்சம் அக்டோபா்- நவம்பருக்கு தள்ளிப்போடப்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT