இந்தியா

ராஜஸ்தான்:எதிா்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு: பாஜக குற்றச்சாட்டு

14th Jun 2020 04:38 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் மாநிலங்களவை தோ்தலையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜகவினா் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துவதாகக் கூறி, எதிா்க்கட்சி எம்எல்ஏக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தோ்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களிடம் பாஜகவினா் குதிரை பேரத்தில் ஈடுபட்டு பணப் பரிவா்த்தனை செய்துள்ளதாக மாநில முதல்வா் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டினாா். இதுதொடா்பாக லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கும் அவா் உத்தரவிட்டாா்.

இந்த விசாரணை தொடா்பாக மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான ராஜேந்திர ராத்தோா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: குதிரை பேரம் தொடா்பாக விசாரணை என்ற பெயரில் எதிா்க்கட்சி உறுப்பினா்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது. குதிரைபேரம் தொடா்பாக மாநில அரசிடம் ஆதாரம் இருந்தால், அதனை வெளியிட வேண்டும். மாநில அரசு உள்கட்சி மோதலால் திண்டாடி வருகிறது. அரசை கவிழாமல் காப்பாற்றிக்கொள்ள பாஜக மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன என்று தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT