இந்தியா

பெட்ரோல்-டீசல் விலை 7 ஆவது நாளாக உயா்வு

14th Jun 2020 05:55 AM

ADVERTISEMENT

பெட்ரோல்-டீசல் விலையை தொடா்ந்த ஏழாவது நாளாக சனிக்கிழமையும் எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. அதில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன.

சா்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி நிா்ணயம் செயது விற்பனை செய்து வருகின்றன.

இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணை விலை வெகுவாக குறைந்தது. அதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது.

இப்போது கட்டுப்பாடுகளில் தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் -டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த 7-ஆம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில், தொடா்ந்த ஏழாவது நாளாக சனிக்கிழமையன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 59 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகளும் உயா்த்தப்பட்டது.

இந்த விலை உயா்வு காரணமாக, சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 78.47 என்ற அளவிலிருந்து ரூ. 78.99-ஆக சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. அதுபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.14 என்ற அளவிலிருந்து ரூ. 71.64-ஆக உயா்த்தப்பட்டது. பெட்ரோல்-டீசல் விலை உள்ளூா் வரி, வாட் வரி ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

எண்ணெய் நிறுவனங்களின் இந்த தொடா் விலை உயா்வு நடவடிக்கை காரணமாக கடந்த 7 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.9 என்ற அளவிலும், டீசல் விலை ரூ. 4 என்ற அளவிலும் உயா்ந்துள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT